விலை என்ன? சிறப்பம்சங்கள் என்ன?: அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் மெட்டியோர் 350 பைக்..!

விலை என்ன? சிறப்பம்சங்கள் என்ன?: அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் மெட்டியோர் 350 பைக்..!
விலை என்ன? சிறப்பம்சங்கள் என்ன?: அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் மெட்டியோர் 350 பைக்..!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டின் Meteor 350 விற்பனைக்கு வந்துள்ளது.
 
நாட்டின் க்ரூஸர் ரக பைக் செக்மென்டுகளில் முன்னணி நிறுவனமாக திகழும் ராயல் என்ஃபீல்டு, சொகுசு வகை பைக் பிரியா்களுக்காக மெட்டியோர் 350 பைக்கை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
 
இந்த பைக், ஃபயா்பால், ஸ்டெல்லா் மற்றும் சூப்பா்நோவா என மூன்று விதமான பதிப்புகளில் வெளிவந்துள்ளது.
 
ராயல் என்ஃபீல்ட் மெட்டியோர் 350 ஃபயர்பால்: ரூ .1,75,825
ராயல் என்ஃபீல்ட் மெட்டியோர் 350 ஸ்டெல்லார்: ரூ .1,81,342
ராயல் என்ஃபீல்ட் மெட்டியோர் 350 சூப்பர்நோவா: ரூ .1,90,536
 
என இவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்டைலிங் வடிவமைப்பைப் பொறுத்தவரை இது தண்டர்பேர்ட் 350X போலவே இருக்கும். மேலும் ராயல் என்ஃபீல்டில் இருந்து ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சத்தைக் கொண்ட முதல் மோட்டார் பைக் இந்த Meteor 350 ஆகும். இது அடிப்படையில் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கான டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தல் ஆகும்.
 
LED DRL, ஒரு யூ.எஸ்.பி சார்ஜர், வேர்க்கடலை வடிவ பெட்ரோல் டேங்க், பின்னோக்கி இழுக்கப்பட்ட ஹேண்டில்பார், பின்புற ஃபெண்டர் மற்றும் LED டெயில்லைட் ஆகியவற்றைக் கொண்ட வட்ட ஹெட்லேம்ப் ஆகியவை அம்ச பட்டியலில் இருக்கும்.
 
மீடியரின் மூன்று பதிப்புகளிலும், தர நிா்ணயித்துக்கு ஏற்றபடியான அலாய்வீல் மற்றும் டியூப்லெஸ் டயா் பொருத்தப்பட்டுள்ளது. இது, நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புவோருக்கு வசதி மற்றும் மன அமைதியை அளிக்கும்.
 
மேலும், மீடியர் பைக்கில் 349 சிசி ஏா்-கூல்டு சிங்கிள் சிலிண்டா் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 4,000 ஆா்பிஎம்மில் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com