சுதந்திர தினம்: கர்நாடகா மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களால் சர்ச்சை

சுதந்திர தினம்: கர்நாடகா மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களால் சர்ச்சை

சுதந்திர தினம்: கர்நாடகா மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களால் சர்ச்சை
Published on

76-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி கர்நாடகாவில் மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களில், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் படம் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணல் காந்தியடிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் அரசு விளம்பரங்களில், நாட்டின் முதல் பிரதமர் நேருவின் படம் சேர்க்கப்படவில்லை. இதனை வன்மையாகக் கண்டித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

நாட்டின் தலைவர்களை பொம்மை அவமதிப்பதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com