\
Row Over Bengal Minister's Threat to Capture Bangladesh
அர்ஜூன் சிங்ANI

”டிச.16-க்குள் வங்கதேசத்தைக் கைப்பற்றுவோம்” - பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!!

டிசம்பர் 16-ம் தேதிக்குள் வங்கதேசத்தை கைப்பற்றுவோம் என மேற்கு வங்க பாஜக அமைச்சர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on: 

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக மாறியதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கடந்த 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையில், போராட்டத்தின்போது நடத்தப்பட்ட ஒடுக்குமுறை தொடர்பான மனித உரிமை மீறல் வழக்கில், அவருக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தச்சூழலில் தான், அவரை நாடு கடத்தக் கோரி இந்தியாவிடம் வங்கதேசம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனாReuters

இதற்கிடையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஷேக் ஹசீனா நாடு திரும்புவதாக கடந்த ஜூலையில் அறிவித்தார். குறிப்பாக, அவர் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி வங்கதேசம் செல்வார் எனவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக, புதிய அடையாள அட்டைக் கோரி வங்கதேச தூதரகத்தில் ஷேக் ஹசீனா சமீபத்தில் விமர்சித்த நிலையில், தண்டனைக் கைதிக்கு அடையாள அட்டை வழங்க முடியாது என வங்கதேச அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. தொடர்ந்து, அவர் நாடு திரும்ப வேண்டுமென்றால், இந்தியாவிடமிருந்து நாடு கடத்தல் நடவடிக்கை மூலமாக மட்டுமே அழைத்து வரப்படுவார் என்றும் அதேசமயம், அவர் வங்கதேசத்தில் மரண தண்டனையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வாய்ப்புகள் இல்லை என வங்கதேச அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியில், வங்கதேசத்தில் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், மதச் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவங்களை குறிப்பிட்டு இந்திய அரசு கவலைகளைத் தெரிவித்திருக்கிறது.

இந்தச்சூழலில் தான், மேற்கு வங்க அமைச்சர் ஒருவரின் வங்கதேசத்தை கைப்பற்றுவோம் என்ற பேச்சு ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் வங்கதேசத்தை நாம் கைப்பற்றுவோம். வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்குப் பழிவாங்கியே தீருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, ஷேக் ஹசீனா நாடு திரும்பும் தேதியை குறிப்பிட்டு, அந்நாளில் வங்கதேசத்தைக் கைப்பற்றுவோம் என பாஜக அமைச்சர் தெரிவித்திருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Row Over Bengal Minister's Threat to Capture Bangladesh
கேட்பது 200.. சம்மதிப்பது 26 : காங்.க்கு கெடுபிடி காட்டும் அகிலேஷ்! உ.பி தேர்தலில் அதிரடி ட்விஸ்ட்!