\
சசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரூபா, கர்நாடக உள்துறை செயலாளராக பொறுப்பேற்பு!

சசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரூபா, கர்நாடக உள்துறை செயலாளராக பொறுப்பேற்பு!

சசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரூபா, கர்நாடக உள்துறை செயலாளராக பொறுப்பேற்பு!
Published on: 

சசிகலா விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய ஐபிஎஸ் அதிகாரியான ரூபா,  கர்நாடக மாநில  உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் இப்பதவியில் பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரி என்கிற பெருமையை பெறுகிறார் ரூபா.

பெங்களூரு ரயில்வேயில் ஐ.ஜி.பி. ஆக பணியாற்றி வந்த ரூபா, மாநில அரசின் உள்துறை செயலாளராக பதவியேற்றுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக, அப்போது சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ரூபா பரபரப்பு கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com