பணியிட மாற்றம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என பரப்பன அக்ரஹாரா சிறையில் டிஐஜியாக பணியாற்றிய ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை உட்பட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியவர் டிஐஜி ரூபா. இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் நேற்று டிஐஜி ரூபா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது அலுவலகத்திலிருந்து வெளியே வந்த டிஐஜி ரூபாவை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
பணியிட மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறிவிட்டு டிஐஜி ரூபா நிற்காமல் சென்றார். இருப்பினும், விடாமல் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதனைப் பொருட்படுத்தாத டிஐஜி ரூபா, அங்கிருந்து தனது வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார்.