\
வங்கிகளில் ரோபோக்கள் சேவை
வங்கிகளில் ரோபோக்கள் சேவைpt web

வங்கிகளில் சேவைகளை வழங்கும் ரோபோக்கள்.. IOB-யில் புதிய முன்னெடுப்பு!

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை ரோபோக்கள் வழங்கப்போகின்றன என்ற தகவலை கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
Published on: 

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை ரோபோக்கள் வழங்கப்போகின்றன என்ற தகவலை கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு என்ன சேவை வழங்க வேண்டும் என கேட்டறிய உள்ளனவாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா இதனை தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் ரோபோக்கள் சேவை
”உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளை கேட்பது பெருமை..”! பவன் கல்யாணிற்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

மறுசீரமைப்பு நடவடிக்கையாக, அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தங்கள் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ரோபோட்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க வட்டார மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் வகையில் ரோபோக்களை வடிவமைக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக, வங்கிக்கணக்கு தொடங்குவது, வாடிக்கையாளர்கள் லாக்கரை திறக்க உதவுவது போன்ற பணிகள் ரோபோக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

வங்கிகளில் ரோபோக்கள் சேவை
ஆத்தூர்: பேட்டரி சைக்கிள் வடிவமைத்த அரசுப்பள்ளி மாணவர்... அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com