ATM Theftpt desk
இந்தியா
ATM இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி பணம் கொள்ளை-CCTV-யில் சிக்கிய ஹரியானா கொள்ளையர்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த ஹரியானா கும்பலை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெங்களூருவின் பெல்லந்தூர் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு வந்த கொள்ளையர்கள் போர்வையை போர்த்திக்கொண்டு ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் சிசிடிவி கேமரா மீது கருப்பு பெயிண்ட் அடித்துவிட்டு, கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி, பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
CCTV Footagept desk
ராஜஸ்தான்: பள்ளியில் சட்டென மயங்கி விழுந்த சிறுவன்.. துடிப்பதை நிறுத்திய இதயம்! ஷாக்கான CCTV வீடியோ!
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தமிழக பதிவெண் கொண்ட காரை திருடி, அதில் வந்து கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் கொள்ளையர்கள், ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.