டெல்லி - இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

டெல்லி - இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

டெல்லி - இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
Published on

டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

டெல்லியில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு தினசரி 200ஐ தாண்டியதால் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் சாலைகளில் அனைத்து வாகனங்களும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இதனால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் குறைந்து காணப்பட்டது. டெல்லியில் நேற்று மட்டும் 290 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com