2019 - சாலை விபத்துக்களில் 1 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழப்பு -அதிர வைக்கும் ரிப்போர்ட்

2019 - சாலை விபத்துக்களில் 1 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழப்பு -அதிர வைக்கும் ரிப்போர்ட்
2019 - சாலை விபத்துக்களில் 1 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழப்பு -அதிர வைக்கும் ரிப்போர்ட்

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களின் வழியே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த 2019 ஆம் ஆண்டு உலக அளவில் நடந்த சாலை விபத்துக்களில் 13.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளாதவும், இதில் 11 சதவித விபத்துக்கள் இந்தியாவில் நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதன் படி கடந்த இந்தியாவில் சாலை விபத்துக்களில் 1,51,113 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 63,093 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 37,461 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு 4,67,044 சாலை விபத்துக்கள் நடந்த நிலையில் 1,51,417 நபர்கள் தங்கள் வாழ்கையை இழந்தனர். இந்த எண்ணிக்கையை இந்த வருடத்துடன் ஒப்பிடும் பட்சத்தில் 0.20 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

2019 ஆம் ஆண்டைப் பொருத்தவரை உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 22,655 நபர்கள் சாலை விபத்துக்களில் தங்களது வாழ்கையை இழந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளது.  ஜெய்பூர், சென்னை, பெங்களூரு, கான்பூர் உள்ளிட்ட இடங்களிலும் அதிகப்படியான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. சாலைவிதிகளை முறைப்படி கடைப்பிடிக்காததாலும் அதிவேகமாக பயணம் செய்தமையாலும் இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துக்களில் 67 சதவீதமானது தவறான பாதையில் வாகனத்தை இயக்கிய காரணத்தினால் நிகழ்ந்தவை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com