\
ஆர்.கே.நகர் தேர்தல்? ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை

ஆர்.கே.நகர் தேர்தல்? ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை

ஆர்.கே.நகர் தேர்தல்? ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை
Published on: 

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கை‌கள் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆதாரங்களின் தன்மையை பொறுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 50 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதற்கான ஆணவங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com