பீகாரில் ஆர்ஜேடி தலைவர் சுட்டுக்கொலை: வாக்கிங் சென்றபோது பயங்கரம்!
பீகாரில், வாக்கிங் சென்ற ராஷ்டிரிய ஜனதா தள பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத் தி யுள்ளது.
பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்சியின் சமஸ்திர் பூர் மாவட்டத் தலைவராக இருந்தவர் ரகுவர் ராய். கல்யாண்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை வழக்கம் போல நடை பயிற்சிச் சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் அவரை சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து ஆம்புல ன்ஸுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ராயின் உடலை கைப்பற்றி, மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தை கேள்விபட்ட அவரது ஆதரவாளர்கள் சமஸ்திபூர்-தர்பகங்கா சாலையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டன ர். சாலைகளில் டயர்களை கொளுத்தி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண் டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.