`எங்க வந்து யாரு முன்னாடி...!’-Couple Photoshootல் கடுப்பாகி தென்னை மட்டையால் அடித்த யானை!

`எங்க வந்து யாரு முன்னாடி...!’-Couple Photoshootல் கடுப்பாகி தென்னை மட்டையால் அடித்த யானை!
`எங்க வந்து யாரு முன்னாடி...!’-Couple Photoshootல் கடுப்பாகி தென்னை மட்டையால் அடித்த யானை!

இப்போதெல்லாம் ஃபோட்டோஷூட்டுக்கென்றே கல்யாணம் செய்துக்கொள்ளும் இளைஞர்கள் ஏராளம். ஃபோட்டோஷூட் என்றவுடன், அது ஏதோ ஒரேயொரு நிகழ்வுதான் என்று நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. திருமணத்துக்கு முன் ஒரு ஷூட், திருமணத்தின் போதே நிச்சயதார்த்தம் - கல்யாணம் - ரிசப்ஷன் என பல ஷூட்கள், அதற்குப்பின்னும் திருமணத்துக்கு பின்னான ஃபோட்டோ ஷூட் என ஏராளமான எக்கச்சக்கமான ஃபோட்டோஷூட்கள் உள்ளன. இதுவே தனியொரு பிசினஸ் என்றுக்கூறலாம்.

இந்த ஃபோட்டோஷூட் மோகம், விதவிதமான பல முயற்சிகளை தம்பதிகள் மேற்கொள்ள காரணமாக அமைகிறது. சில நேரங்களில் அவை ஆபத்தாகி விடுவதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம்தான் சமீபத்தில் கேரளாவின் கொல்லத்தில் நிகழந்துள்ளது. நல்வாய்ப்பாக இணையருக்கு அதில் எந்த ஆபத்தும் இல்லை. இதனால் அந்த நிகழ்வை, நகைச்சுவையாக சம்பந்தப்பட்ட ஃபோட்டோகிராஃபர்ஸ் பதிவிட்டுள்ளனர்.

அப்படி என்ன தெரியுமா நடந்தது அங்கு? கேரளாவில் ஃபோட்டோஷூட்டுக்கு இடையே, மணமக்களின் பின்னே இருந்த யானையொன்று மட்டையை தூக்கி அடித்துள்ளது. அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொல்லம் மாவட்டத்தில் பன்மன ஸ்ரீ சுப்பிரமணி ஆலயத்தில், மணமக்கள் ஜெய்சங்கர் – கிரீஷ்மா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்பு, கோயில் யானைக்கு முன், மணமக்களை நிற்க வைத்து புகைப்படக் கலைஞர்கள் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, அந்த யானை, சாப்பிட்டுக்கொண்டிருந்த தென்னை மட்டையை எடுத்து மணமக்கள் மீது வீசியுள்ளது.

அந்த காட்சி, புகைப்பட கலைஞர்களின் கேமராவிலும் பதிவாகி உள்ளது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com