இன்றைய தங்கத்தின் விலை
‘தங்கம் விலை இன்னும் குறையட்டும் வாங்கிடலாம்’ என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூபாய் 75 அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஒரு கிராம் ரூபாய் 6,425 க்கும் ஒரு சவரன் ரூபாய் 600 அதிகரித்து ரூபாய் 51,400க்கும் விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலையானது ஒரு கிராம் 82 ரூபாய் அதிகரித்து ரூபாய் 7,009-க்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒரு சவரன் தூய தங்கம் ரூ. 656 ரூபாய் அதிகரித்து ரூ.56,072 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் குறைந்து 86.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
நேற்று சரிந்திருந்த பங்குச் சந்தையானது இன்று ஏறுமுகத்தில் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையானது சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்ந்து 79,705 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 200 புள்ளிகள் உயர்ந்து 24,369 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஏற்றமானது ஆகஸ்ட் 15 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.