பள்ளியில் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

பள்ளியில் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

பள்ளியில் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
Published on

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மோகன் பகவத் மூவர்ணக் கொடியை ஏற்றினார். முன்னதாக பள்ளியில் அரசியல்வாதிகள் தேசிய கொடி ஏற்றக் கூடாது எனக் கூறி, மாவட்ட ஆட்சியர் சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதனை ஏற்கவில்லை.

கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு இடையே கடும் மோதல்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com