\
சுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது - பிரதமர் மோடி இரங்கல்

சுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது - பிரதமர் மோடி இரங்கல்

சுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது - பிரதமர் மோடி இரங்கல்
Published on

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீண்ட இரங்கல் வெளியிட்டுள்ளார். “இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் சுஷ்மா. சுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவுவும் வருந்துகிறது. எந்த துறை கொடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட்டவர் சுஷ்மா” என பிரதமர் மோடி தன்னுடைய இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com