சுதந்திர தின கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழப்பு

சுதந்திர தின கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழப்பு

சுதந்திர தின கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழப்பு
Published on

76வது சுதந்திர தினவிழா கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலம் தட்சினகன்னடாவில் நடந்துள்ளது. 

75 வது சுதந்திர விழா முடிந்து 76 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் தட்சினகன்னடா மாவட்டம் கடபா தாலுகா குற்றபாடி பஞ்சாயத்தில் உள்ள பழைய ஸ்டேஷன் அமிர்த சரோவர் அருகே இன்று தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் என்.கருணாகரா கொடி ஏற்றுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது, அங்கு நின்றிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கங்காதர கவுடா கொடி வணக்கத்தை தெரிவித்தார்.

அப்போது கொடியேற்றம் நடக்கவிருந்த நிலையில் வணக்கம் செலுத்திய முன்னாள் ராணுவ வீரர் கங்காதர கவுடா மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் வருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com