பொருளாதார மந்த நிலைக்கு ப.சிதம்பரமே காரணம் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஃப் அதிகாரி தற்கொலை கடிதத்தில் தகவல்

பொருளாதார மந்த நிலைக்கு ப.சிதம்பரமே காரணம் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஃப் அதிகாரி தற்கொலை கடிதத்தில் தகவல்
பொருளாதார மந்த நிலைக்கு ப.சிதம்பரமே காரணம் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஃப் அதிகாரி தற்கொலை கடிதத்தில் தகவல்

பொருளாதார மந்த நிலைக்கு சிதம்பரமே காரணம் என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஃப் அதிகாரி பிஜன் தாஸ் மோடிக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் அலகாபாத்தை சேர்ந்த பைஜன் தாஸ் என்பவர் விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது பிரதமர் மோடிக்கு 5 பக்க தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். மேலும் தனது இறுதி சடங்குக்காக ஆயிரத்து ஐநூறு ரூபாயும், அறை வாடகைக்கு ரூ. 500 வைத்துள்ளார். தனது நிதி நிலை மோசமாக உள்ளதால் தன்னால் அதற்கு மேல் பணம் தர இயலவில்லை எனவும் பைஜன் தனது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து மோடிக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில் "நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது. காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த ஊழல்கள், தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றால் ஓய்விற்கு பிறகு என்னால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. தவறான நிதி மேலாண்மை என்பது உடனடியாக வந்தது கிடையாது. இது கடந்த சில ஆண்டுகளால் நடந்த தவறான நடவடிக்கை.

மோடி அரசை மட்டும் பொருளாதார சரிவிற்கு காரணமாக குற்றம்சாட்டுவது சரியல்ல. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்டது தற்காலிகமான பாதிப்பு” எனக் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன் தனது மகன் விவேக் தாஸின் பாடகராகும் கனவை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். தனது இறுதி சடங்குகளுக்கு தனது குடும்பத்தினரை அழைக்க வேண்டாம் எனவும் தனது உடலை தன் மகன் பார்ப்பதை தான் விரும்பவில்லை எனவும், தெரிவித்துள்ளார். அலகாபாத்திலேயே தனது உடலை எரித்து விடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com