காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - இதனால் மாற்றம் என்ன?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - இதனால் மாற்றம் என்ன?
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - இதனால் மாற்றம் என்ன?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது.

370வது பிரிவு ரத்து - அடுத்தது என்ன?

370வது பிரிவு ரத்தால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொறுத்தும்

பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் இனி அசையா சொத்துக்களை வாங்கலாம்

வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலும் இனிமேல் ஜம்மு-காஷ்மீரில் அம்மாநில பெண்கள் சொத்து வாங்கலாம்

370வது பிரிவு ரத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை இனி குறைக்கலாம், கூட்டலாம்

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6லிருந்து 5 ஆண்டுகளாக மாறுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com