கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி
வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியில் 0.35 சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முடிவால் வீடு, வாகனம், தொழில், தனிநபர்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 4 வதுமுறையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 1.15 சதவிகித வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த மூன்று முறை தலா 0.25 சதவீதம் வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி தற்போது 0.35 சதவீதம் குறைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளதால் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என அரசு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் தற்போது 0.35 சதவீதமாக வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்திலிருந்து 5.40சதவீதம் ஆக குறைத்துள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 5.50 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் பலன் உடனடியாக கிடைக்குமா அல்லது முழுப் பலனும் கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன்மூலம் கார், மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் அதிகமாக விற்க வழிவகை ஏற்படும். ஏனென்றால் கார் மற்றும் இருச்சக்கர வாகனம் விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு மந்தமான நிலையில் உள்ளது.