ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 4.40% லிருந்து 4.0% ஆக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ரெப்போ வட்டி விகிதம் 4.40%ல் இருந்து 4.0% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார். ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்புள்ளது.

அத்துடன் வங்கிகள் தங்கள் வசமுள்ள பணத்தை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும்போது அளிக்கப்படும் வட்டியான ரிவசர்ஸ் ரிப்போ வட்டியின் விகிதமும் 3.35% ஆக குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் பருப்புகள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என கணித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழில்துறை வளர்ச்சி மார்ச் மாதத்தில் 17% குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com