தனிமனிதனாக புல்வாமா தாக்குதல் பாதிப்புக்கு 110 கோடி நிதி திரட்டிய விஞ்ஞானி

தனிமனிதனாக புல்வாமா தாக்குதல் பாதிப்புக்கு 110 கோடி நிதி திரட்டிய விஞ்ஞானி

தனிமனிதனாக புல்வாமா தாக்குதல் பாதிப்புக்கு 110 கோடி நிதி திரட்டிய விஞ்ஞானி
Published on

மும்பையைச் சேர்ந்த பார்வையற்ற விஞ்ஞானி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.110 கோடி நிதி திரட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவை பூர்வீகமாக கொண்ட முர்தாஸா ஹமீத் என்பவருக்கு பிறவியிலேயே பார்வையில்லை. கடினமான சூழலில் அரசு கல்லூரியில் பொருளாதாரம் பட்டப்படிப்பு பயின்ற அவர், மும்பையில் ஆய்வுக்கூடம் வைத்துள்ளார். ‌கடந்த ஆண்டு எரிபொருளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சை பயன்படுத்தி வாகனம் செல்லும் பாதையை முர்தாஸா ஹமீத் கண்டுபிடித்தார். 

இதை நாட்டுக்காக அற்பணித்துள்ள இவர், அண்மையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக 110 கோடி ரூபாய் நிதியை தன்னந்தனியாக திரட்டியுள்ளார். பிரதமர் மோடியின் தேசிய நிவாரண நிதியில் இந்தத் தொகையை முர்தாஸா ஹமீத் செலுத்தியுள்ளார். 

முன்னதாக, புல்வாமா தக்குதலில் இறந்த பாதுகாப்புப் படையினருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமாக்காரர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மக்கள் எனப் பலரும் நிதியுதவி செய்துள்ளனர். இருப்பினும், தனி ஒருமனித முயற்சியால் ரூ.110 கோடி நிதி திரட்டிய விஞ்ஞானியின் செயல் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com