யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளைக்கான நன்கொடைகளுக்கு, வருமான வரித்துறை ஐந்து ஆண்டுகள் வரி விலக்கு அளித்துள்ளது.
பதஞ்சலி குழுமம், மூலிகை தயாரிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள், பற்பசை, நூடுல்ஸ், சோப்பு மற்றும் கழிப்பறை சுத்திகரிப்பான்கள் வரை விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு ஆராய்ச்சி நிறுவன அந்தஸ்தினை வழங்கியிருக்கும் வருமானத்துறை பல்வேறு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது.
2021-2022 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த சலுகைகள், 2022-23 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. இந்த சலுகைகள் மூலமாக பதஞ்சலியின் நன்கொடையாளர்களுக்கு வரிச்சலுகை கிடைக்கும். பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது.