கேரளாவில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல கப்பல் வழி ஆம்புலன்ஸ்
கேரளாவில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் கப்பல் வழி ஆம்புலன்ஸ்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரளாவில் வாகனங்கள் செல்ல முடியாதப்பகுதிகளில் வசிக்கும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல அம்மாநில அரசு கப்பல்களை ஆம்புலன்ஸூகளாக மாற்றியுள்ளது. இது குறித்து ஆலப்புழா மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது “ இந்தச் சேவை பல கொரோனா நோயாளிகளை அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிறது” என்றார்.
108 என்ற எண்ணை அழைப்பதின் மூலம் மக்கள் இந்தக் கப்பல் வழி ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியும். படகு ஊழியர்கள் நோயாளிகளை பிபிஇ உடைகளை அணிந்து கொண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இது குறித்து நீர் போக்குவரத்து துறை இயக்குனர் ஷாஜி வி நாயர் கூறும் போது “ இதில் இரண்டு வகையான ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஒன்று கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுகிறது. மற்றொன்று பொது நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இந்தப்படகுகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. பொதுவாக இந்தப் படகுகள் வெள்ளப்பாதிப்பு காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது முழு நேரமும் செயல்படுகிறது. பொதுவான நேரங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும். அதன் பின்னர் அவர்களுக்கு வேறு வசதி இருக்காது” என்றார்.