போலி டிஆர்பி விவகாரம்: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ. கைது

போலி டிஆர்பி விவகாரம்: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ. கைது
போலி டிஆர்பி விவகாரம்: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ. கைது

போலி டிஆர்பி விவகாரம் தொடர்பான வழக்கில் ‛ரிபப்ளிக்’ டிவியின் சிஇஓ விகாஸ் காஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தனர்.

டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டி.ஆர்.பி.,யில் மோசடி நடந்ததாக மும்பை போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ‛ரிபப்ளிக்’ டிவி உட்பட மூன்று சேனல்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த டிவி நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த வழக்கில், ‛ரிபப்ளிக்’ டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பாக ‛ரிபப்ளிக் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ்  காஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 13 வது நபர் இவர் ஆவார்.

முன்னதாக தங்கள் ஊழியர்களை கைது செய்யக் கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 'ரிபப்ளிக்’ டிவி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com