ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்: 2 பேர் கைது
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி மும்பையில் உள்ள ஸ்டூடியோவிலிருந்து வீடு திரும்பும் வழியில் நள்ளிரவில் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி. இவரது மனைவி சாமியா கோஸ்வாமி. இவர்கள் நேற்று இரவு பணி முடித்தபின் ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுற்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பாட்டில்களையும் வீசியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் ஐபிசி 341, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய 2 பேரை கைது செய்துள்ளனர். இது காங்கிரஸ்காரர்களின் வேலைதான் எனவும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சோனியா காந்தியே காரணம் எனவும் அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார்.