மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் முற்றும் பூசல்... விலகுகிறாரா ஷிண்டே?
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா கட்சிகளுக்கு இடையே விரிசல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலகுகிறாரா ஷிண்டே?
ஷிண்டே சிவசேனாவை சேர்ந்தவர்கள் மீது மத்திய, மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகளின் பிடி இறுகி வருகிறது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷிண்டேவின் உதவியாளர் அமித் சங்கே மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர மேலும் சில ஷிண்டே சிவசேனா கட்சி பிரபலங்களும் சிக்கலில் உள்ளனர். இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று சில விஷயங்களை உறுதிபட தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணி அரசில் இருந்து விலகி வெளியே இருந்து ஆதரவு தருவது குறித்து பரிசீலிக்கப்போவதாக ஷிண்டே கூறியதாக தெரிகிறது.
அரசு பதவியேற்றதில் இருந்த ஷிண்டே அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது முற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர பேரவையில் பாஜகவுக்கு 132 உறுப்பினர்களும் ஷிண்டே சிவசேனாவிற்கு 57 உறுப்பினர்களும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவுக்கு 41 உறுப்பினர்களும் உள்ளனர்.