வன்முறை சம்பவங்கள்முகநூல்
இந்தியா
NE வன்முறை சம்பவங்கள் | 77 சதவீதம் மணிப்பூரில் நடந்ததுதான்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
2023ஆம் ஆண்டு, வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில், 77 சதவீத வன்முறைகள் மணிப்பூரில் நிகழ்ந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு, வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில், 77 சதவீத வன்முறைகள் மணிப்பூரில் நிகழ்ந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த 2023ஆம் ஆண்டு அதிக வன்முறை சம்பவங்கள் நடந்தேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் மொத்தமாக 243 வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அதில்187 சம்பவங்கள் மணிப்பூரில் நிகழ்ந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, மணிப்பூரில் 33 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.