கலாம் பெயரிலான விருதை தன் அப்பா பெயரில் மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி

கலாம் பெயரிலான விருதை தன் அப்பா பெயரில் மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி
கலாம் பெயரிலான விருதை தன் அப்பா பெயரில் மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் அப்துல் கலாமின் பெயரில் வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் விருதின் பெயரை, தனது தந்தையின் பெயரில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றார்.

ஆந்திர மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவியருக்கு மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் அப்துல்கலாம் பிரதிபா வித்யா புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிகாலத்தில் ஆண்டுதோறும் தேசிய கல்வி தினமான நவம்பர் 11ஆம் தேதி இந்த விருது வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆந்திராவுக்கு முதல்வராகியிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விருதின் பெயரை மாற்றினார். அப்துல் கலாமின் பெயரை நீக்கிவிட்டு, தனது தந்தையும் மறைந்த முதலமைச்சருமான ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்டினார். அதாவது ஓய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார் என்று பெயர் மாற்றம் செய்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பெயர் மாற்றம் செய்து அப்துல் கலாமை ஜெகன்மோகன் ரெட்டி அவமதித்துவிட்டதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ட்விட்டரில் விமர்சித்தார். பாஜகவும் கண்டனம் தெரிவித்திருந்தது. சமூகவலைதளங்களில் "ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் party insults அப்துல் கலாம்" என்ற ஹாஸ்டேகில் எதிர்ப்பு பகிரப்பட்டது. 

இந்த நிலையில், தனது அறிவிப்பை ஜெகன்மோகன் ரெட்டி திரும்ப பெற்றதாக தகவல் வெளியானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com