"கல்வித்துறையில் மறுமலர்ச்சி" - இந்தி மொழியில் மருத்துவ படிப்பை துவக்கி வைத்த அமித்ஷா!

"கல்வித்துறையில் மறுமலர்ச்சி" - இந்தி மொழியில் மருத்துவ படிப்பை துவக்கி வைத்த அமித்ஷா!
"கல்வித்துறையில் மறுமலர்ச்சி" - இந்தி மொழியில் மருத்துவ படிப்பை துவக்கி வைத்த அமித்ஷா!

புதிய கல்விக் கொள்கை மூலம் பிராந்திய மற்றும் தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

நாட்டிலேயே முதன்முறையாக, எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பை இந்தி மொழியில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளகான் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், மருத்துவப் பாடப் புத்தகங்களின் ஹிந்திப் பதிப்பை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுப் பேசினார்.

“இந்தி மொழியில் மருத்துவக் கல்வி என்பது கல்வித் துறையில் ஒரு மிகப்பெரிய படி. இன்று இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது போல், விரைவில் எட்டு மொழிகளில் பொறியியல் படிப்பும் தொடங்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் தாய் மொழிக்கும் பிராந்திய மொழிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் கல்வி கற்பதே நாட்டின் உண்மையான சேவை என்று மகாத்மா காந்தி கூறினார்.

இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இன்று, இந்தியக் கல்வித் துறைக்கு மிக முக்கியமான நாள். கல்வித் துறையின் மறுமலர்ச்சித் தருணம் இது. தாய்மொழியில் சிறப்பாக சிந்திக்கவும், புரிந்துகொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும், செயல்படவும் முடியும். இந்திய மாணவர்கள், தங்கள் தாய்மொழியில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியைப் படிக்கும்போது, உலகின் முக்கியக் கல்வி மையமாக இந்தியா மாறும் என்று நம்புகிறேன்.

மொழியின் பின்தங்கிய நிலையில் இருந்து வெளியே வருமாறு நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை நான் அழைக்கிறேன். தாய்மொழியில் பெருமை கொள்ள வேண்டும். தாய்மொழியில் படிப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்த முடியும்” என்றார் அமித் ஷா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com