“கருத்துக்கணிப்புகளை நீக்க வேண்டும்” - ட்விட்டருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ட்விட்டர் பயனாளி ஒருவர் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்த நிலையில், அது குறித்து புகார் எழுந்தவுடன், அவரே அந்தப்பதிவை நீக்கியதாக தெரிகிறது. வரும் 19ஆம் தேதி கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடக்கூடாது. எனவே, அது தொடர்பான பதிவுளை நீக்கும்படி ட்விட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் முடியும் முன்னரே விதியை மீறி கருத்துக்கணிப்புகள் தொடர்பான செய்திகள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், செய்தித்தாள்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.