கார்கில் போரில் இந்திய படைகள் வெற்றி பெற்ற தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
விஜய் திவஸ் என அழைக்கப்படும் இந்நாளுக்காக காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கார்கில் பகுதியை ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படை வீரர்களை இந்திய படைகள் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி முழுமையாக விரட்டின. கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய வீரர்களை நினைவு கூர்வதாக குறிப்பிட்டுள்ளார். ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவு கூற வேண்டும் என்று ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.