ரூ899 முதல் ரூ3490 வரை.. அரசின் கோரிக்கையால் குறைக்கப்பட்ட ரெம்டெசிவர் மருந்தின் விலை
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ரெம்டெசிவர் மருந்தினை தயாரிக்கும் 7 நிறுவன ஊசிகளின் விலை 1000 முதல் 2700 ரூபாய் வரை குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கோவிட் 19 எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்தினை தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள், அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று தானாக முன்வந்து அதன் விலைகளைக் குறைத்துள்ளன என்று தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையம் (NPPA) அறிவித்தது. இதன் காரணமாக ஏழு பிராண்டுகளின் ரெம்டெசிவர் ஊசி மருந்துகளின் விலை தற்போது 100 மில்லி கிராம்க்கு, ரூபாய் 1,000 முதல் 2,700 வரை குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, காடிலா ஹெல்த்கேரின் ரெம்டாக்கின் ரெம்டெசிவர் ஊசி 899 ரூபாய்க்கு விற்பனையாகும், இந்த ஊசி முன்பு 2,800 க்கு விற்கப்பட்டது. பாரத் பயோலாஜிக்ஸ் இந்தியாவின் சிஞ்சின் இன்டர்நேஷனலின் ஊசி, இப்போது ரூபாய் 3,950 க்கு பதிலாக 2,450 க்கு கிடைக்கிறது. டாக்டர் ரெட்டியின் ரெடிக்ஸ் இப்போது 5400க்கு பதிலாக 2,700க்கு கிடைக்கிறது. சிப்லா ஊசியின் விலை 4,000இல் இருந்து 3,000 ஆக குறைத்துள்ளது.
மைலன் பார்மாசியூட்டிகல் ரெம்டெசிவர் மருந்தின் விலை 4800 ரூபாயிலிருந்து 3400 ஆக குறைந்திருக்கிறது. ஜுபிலண்ட் ஜெனரிக்ஸ் மருந்தின் விலை 4700 இல் இருந்து 3400 ஆக குறைந்தும், ஹெடெரோ ஹெல்த்கேர் ரெம்டெசிவர் ஊசியின் விலை 5400 ரூபாயிலிருந்து 3490 ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.