கர்நாடகா: விவசாயிகள் விளைவிக்கும் அரிசியை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம்!

கர்நாடகா: விவசாயிகள் விளைவிக்கும் அரிசியை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம்!
கர்நாடகா: விவசாயிகள் விளைவிக்கும் அரிசியை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம்!

கார்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிந்தனூர் தாலுகாவில் உள்ள விவசாயிகளிடமிருந்து ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அரிசியை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி சுமார் ஆயிரம் குவிண்டால் சோனா மசூரி ரக அரிசியை கொள்முதல் செய்ய உள்ளது ரிலையன்ஸ்.

கர்நாடகாவில் திருத்தி அமைக்கப்பட்ட Agricultural produce market committee சட்டத்தின் மூலம், முதல் முறையாக ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமும், விவசாயிகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஸ்வஸ்த்யா என்ற விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் மூலமாக சுமார் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைவிக்கும் அரிசியை கொள்முதல் செய்ய உள்ளது ரிலையன்ஸ். குறைந்தபட்ச ஆதார விலையை விடவும் கூடுதலாக 82 ரூபாய் செலுத்தி ஒரு குவிண்டாலை 1950 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது ரிலையன்ஸ். 

இப்போதைக்கு 500 குவிண்டால் அரிசி தானிய கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும். அதன் தரம் ரிலையன்ஸ் அதிகாரிகளுக்கு திருப்திகரமாக இருந்தால் எந்நேரமும் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அந்த விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மல்லிகார்ஜுன் வல்கல்டினி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com