போட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்

போட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்
போட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்

போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்றுவதே ரிலையன்ஸ் ஜியோவின் நோக்கம் எனவும் அதில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் அடங்கும் எனவும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பிஎஸ்என்எல் அசோசியேசன் நிறுவனமும் பல கூட்டங்களை நடத்தின. இதில் அனைத்து ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்தனர். 

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்றுவதே ரிலையன்ஸ் ஜியோவின் நோக்கம் எனவும் அதில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினைக் காப்பாற்றவும் அதற்குப் போட்டியாகப் பிஎஸ்என்எல் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே 4ஜி அலைக்கற்றைத் தங்களுக்கு ஒதுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஜியோ வந்ததிலிருந்து இந்திய டெலிகாம் துறை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது எனவும் போட்டியாளர்கள் குறைந்த பிறகு கால் கட்டணங்களை ஜியோ கண்டிப்பாக உயர்த்தும் எனவும் தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கவும், ஜியோவிற்கு அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்தும், ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com