\
பயனாளர்கள் தகவல்கள் கசிவு உண்மைதான்… ரிலையன்ஸ் ஜியோ ஒப்புதல்

பயனாளர்கள் தகவல்கள் கசிவு உண்மைதான்… ரிலையன்ஸ் ஜியோ ஒப்புதல்

பயனாளர்கள் தகவல்கள் கசிவு உண்மைதான்… ரிலையன்ஸ் ஜியோ ஒப்புதல்
Published on

பயனாளர்களின் தகவல்கள் கசிந்தது உண்மைதான் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக நவிமும்பை காவல்நிலையத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தங்களது நிறுவனத்தின் கணினிகளில் சட்டவிரோதமாக புகுந்து தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்திலிருந்து பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுபோன்ற தகவல் திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை மறுத்து வந்தது. இந்தநிலையில், தகவல் திருட்டு நடந்தது உண்மைதான் என்கிறரீதியில் ஜியோ நிறுவனம் அளித்த புகாரில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜியோ நிறுவனம் அளித்த புகாரில் சட்டவிரோதமாக தகவல் திருடப்பட்டது என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதை காவல்துறை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com