குஜராத்: 1000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன்!

குஜராத்: 1000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன்!
குஜராத்: 1000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன்!

’குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆக்சிஜனோடு கூடிய 1000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்படும்’ என்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிடா அம்பானி ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனுக்கு தலைவர்களாக உள்ளார்கள். இந்த ஃபவுண்டேஷன் மூலம் கொரோனா சூழலில் ஆக்சிஜனை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு இலவசமாக அனுப்பிவரும் இவர்கள், தற்போது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.


இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 3000 பேருக்கு மேல் உயிரிழக்கின்றனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காத அவலநிலையும் தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் குஜராத்தின் ஜாம்நகரில் ஆக்சிஜனோடு கூடிய 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, இந்த வாரத்திற்குள் 400 படுக்கைகள் ஜாம்நகர் அரசு பல் மருத்துவமனையில் அமைக்கப்படும் என்றும் அடுத்த 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் இரண்டு வாரத்திற்குள் தனியாக அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா சிறப்பு மையத்திற்கு தேவையான மருத்துவர்கள், மருத்துவ உதவி, உபகரணங்கள் உட்பட அனைத்து செலவுகளுமே ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக ஏற்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com