\
இந்தியாவில் டிச.15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

இந்தியாவில் டிச.15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

இந்தியாவில் டிச.15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு
Published on

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் டிசம்பர் 15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், " சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு பாதிப்பு இதுவரை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com