18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: இன்று முதல் பதிவு தொடக்கம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: இன்று முதல் பதிவு தொடக்கம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: இன்று முதல் பதிவு தொடக்கம்
Published on

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் ஒன்றாம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்புள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட நேரடியாக மருத்துவமனைகளுக்கோ தடுப்பூசி மையங்களுக்கோ செல்வதற்கு பதில் COWIN என்ற அரசின் தளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

18 வயதை கடந்தவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதில் பதிவு செய்து கொள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்று அவசியம். செல்போன் நம்பரை பயன்படுட்தி பதிவு செய்துகொள்ளலாம். ஒரு செல்போன் நம்பரில் நான்கு பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித் தனி புகைப்பட அடையாள அட்டைகள் அவசியம். பதிவு செய்யும்போது அவரவர் விருப்பப்படும் மையத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com