இந்தியா
மீண்டும் அதிக கனமழை பெய்யும் : மும்பை வானிலை மையம் எச்சரிக்கை
மீண்டும் அதிக கனமழை பெய்யும் : மும்பை வானிலை மையம் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் மீண்டும் அதிக கனமழை பெய்யும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பெய்து வரும் பலத்த மழையால் சாலைகள் மற்றும் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை, தானே, பல்கர் மற்றும் ரைகாட் ஆகிய பகுதிகளில் இன்று மிகஅதிக கனமழை பெய்யும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பெய்து வரும் மழையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த எச்சரிக்கை மேலும் அவர்களை பீதியடைய செய்துள்ளது.