ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் நேர்ந்த விபரீதம்.. பரிதாபமாக பலியான இரு உயிர்கள் !

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் நேர்ந்த விபரீதம்.. பரிதாபமாக பலியான இரு உயிர்கள் !
ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் நேர்ந்த விபரீதம்.. பரிதாபமாக பலியான இரு உயிர்கள் !

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு ஸ்கூட்டரில் பயணித்த அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 11 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சைப்பெற்று 1306 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக 377 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 730 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர், 51 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் பாண்டூ சந்தானே வயது 60. இவருக்கு திங்கள்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செவ்வாய்கிழமை இவருக்கு மீண்டும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையை தொலைப்பேசியில் அழைத்து ஆம்புலன்ஸ் உதவியை கேட்டுள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாண்டூ இறந்துவிட்டார்.

பாண்டூவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றசாட்டை முன் வைத்தனர். பாண்டூவுக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனைச் செய்யாமல் சாதாரண மருந்தை கொடுத்து அனுப்பிவிட்டனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இப்போது உயிரிழந்தவரின் உறவினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய மருத்துவமனை முன் வந்துள்ளது. இதேபோல மத்திய பிரதேச மாநிலத்தில் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.

இதேபோல கண்ட்வா மாவட்டத்தில் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஷேக் ஹமீது என்ற 65 வயது முதியவருக்கும் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு, இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அரசு மருத்துவமனைகளின் இந்த மெத்தனப் போக்கு குறித்து அம்மாநில எதிர்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com