\
செம்மரம் வெட்டி கடத்திய 21 பேர் கைது

செம்மரம் வெட்டி கடத்திய 21 பேர் கைது

செம்மரம் வெட்டி கடத்திய 21 பேர் கைது
Published on

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்திய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர். 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.08 டன் எடையுள்ள 64 செம்மரம், ரூ.5030 பணம், 2 டிராக்டர், ஒரு கார், 7 பைக் மற்றும் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் 2 நாட்டுத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களையும் தேடி வருவதாக நெல்லூர் மாவட்ட எஸ்.பி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெல்லூர், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com