இந்தியா
சீனாவுக்கு செம்மரம் கடத்தல்: சித்தூர் ஜெயிலர் உட்பட 5 பேர் கைது
சீனாவுக்கு செம்மரம் கடத்தல்: சித்தூர் ஜெயிலர் உட்பட 5 பேர் கைது
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த சித்தூர் சிறைசாலையின் தலைமை காப்பாளர் உள்ளிட்ட 5 பேரை கடப்பா காவல்துறையினர் கைது செய்தனர்.
நேபாளம், பூடான், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு செம்மரம் கடத்தி வந்த 5 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அதில், கடப்பா மாவட்டம் சக்கராயபேட்டையைச் சேர்ந்த முகமது முபாரக், சித்தூர் சிறையில் தலைமை காப்பாளராக பணியாற்றி வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு 60 லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 7 செல்போன்கள், 2 கார், வெளிநாட்டுப் பணம், 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கடப்பா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தெரிவித்தார்.