வடமாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்..! எதற்கு தெரியுமா?

வடமாநிலங்களில் உள்ள பல மாநிலங்களுக்கு அங்கு நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெட் அலார்ட்
ரெட் அலார்ட் புதிய தலைமுறை

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய காலகட்டங்களில் வடமாநிலங்களில் பொதுவாகவே பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். அதன்படி தற்போது அங்கு நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப் , ஹரியானா, இமாச்சல், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலார்ட்

பார்வை நிலையை பொறுத்து பனிமூட்டத்திற்கான ரெட் அலார்ட் என்பது குறிப்பிடப்படுகிறது. அதன்படி, பார்வை நிலை 50மீ குறைவாக இருக்குமேயானால் ரெட் அல்லது ஆரஞ்ச் அலார்ட் விடப்படும்.

அந்தவகையில் கடுமையான பனிமூட்டம் நிலவவும் மாநிலங்களாக, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல், சண்டிகர்,டெல்லி,வடக்கு ராஜஸ்தான், பீகார்,மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா, நாகலாந்து,மணிப்பூர், மிசோரம் , திரிபுரா போன்ற மாநிலங்களில் ஒரு சில மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இம்மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது.

உறைப்பனி: உத்தரகண்ட், இமாச்சல், மேற்கு உத்தர பிரதேசம், ஹரியான , சண்டிகர், பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான்,டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள ஒரு சில இடங்களில் உறைப்பனி நிலவும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரெட் அலார்ட்
புதுச்சேரி: "2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியமைக்கும்" - பாஜக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு

மேலும் நாளைய நிலையை பொறுத்தவரை ஆரஞ்ச் அலார்ட் விடப்பட்டுள்ளது. அதன்படி, பஞ்சாப், டெல்லி, ஹரியான, சண்டிகர்,உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 5 நாட்களுக்கு வட மாநிலங்களின் உள்ள பல்வேறு பகுதிகளில் மஞ்சள் அலார்ட் விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com