மருத்துவரை அடித்தவரை மத்திய அமைச்சராக்குவதா? - மருத்துவர் சங்கம் எதிர்ப்பு

மருத்துவரை அடித்தவரை மத்திய அமைச்சராக்குவதா? - மருத்துவர் சங்கம் எதிர்ப்பு

மருத்துவரை அடித்தவரை மத்திய அமைச்சராக்குவதா? - மருத்துவர் சங்கம் எதிர்ப்பு
Published on

மத்திய அமைச்சரவையில் அனந்தகுமார் ஹெக்டேவை சேர்த்ததற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை 3-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த 4 பேர் அமைச்சர்களாகினர். 9 பேர் இணை அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களில் அனந்தகுமார் ஹெக்டே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை ஒதுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கர்நாடகாவின் சிர்சி மருத்துவமனை ஒன்றில் தாயாரை அனந்தகுமார் ஹெக்டே சேர்த்திருந்தார். அவருக்கு சரியான சிகிச்சை தரவில்லை என கூறி அம்மருத்துவமனையின் டாக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவர்களை ஹெக்டே அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் ஹெக்டே மீது மருத்துவர்களை அடித்த புகார் உள்ளதாகவும் அவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்தது மருத்துவ சமூகத்திற்கு பெரும் அதிருப்தி தருவதாகவும் பிரதமர் மோடிக்கு ஐஎம்ஏ அமைப்பின் தலைவர் கேகே அகர்வால் கடிதம் எழுதியுள்ளார். எனவே அமைச்சரவையிலிருந்து ஹெக்டேவை நீக்க வேண்டும் என்றும் அகர்வால் கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com