தாமாக முன்வந்து ரூ.6 லட்சம் இழப்பீடு கொடுத்த இஸ்லாமியர்கள்

தாமாக முன்வந்து ரூ.6 லட்சம் இழப்பீடு கொடுத்த இஸ்லாமியர்கள்

தாமாக முன்வந்து ரூ.6 லட்சம் இழப்பீடு கொடுத்த இஸ்லாமியர்கள்
Published on

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நிகழ்ந்த வன்முறையில் சேதமடைந்த பொருட்களுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் தாமாக முன்வந்து இழப்பீடு தொகை வழங்கினர்.

கலவரத்தின் போது சேதமடைந்த பொருட்களுக்கு உரிய நபர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், புலந்த்சாஹரில் கடந்த வாரம் நடந்த கலவரத்தின் போது பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்தன.

இதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் சிலர் ஒன்று சேர்ந்து ஆறு லட்சத்து 27 ஆயிரத்து 507 ரூபாய் வசூலித்துள்ளனர். இந்தத் தொகையை வரைவோலையாக மாற்றி புலந்த்சாஹர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com