இந்தியா
ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார் !
ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார் !
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ பாஜகவில் இணைந்துள்ளார்.
டெல்லி பிஸ்வான் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ தேவேந்திர குமார் ஷெராவத். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அக்கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி எல்எல்ஏவாக கருதப்பட்ட ஷெராவத் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னதாக டெல்லி காந்தி நகர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான அனில் பாஜ்பாய் சமீபத்தில் பாஜகவில் இணைந்திருந்தார். தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் ஒரு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ, பாஜகவில் இணைந்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.