அதிகாரத்தில் உள்ளவர்களின் இருக்கையில் ஏன் வெள்ளை டவல் போடப்படுகிறது தெரியுமா?

அதிகாரத்தில் உள்ளவர்களின் இருக்கையில் ஏன் வெள்ளை டவல் போடப்படுகிறது தெரியுமா?
அதிகாரத்தில் உள்ளவர்களின் இருக்கையில் ஏன் வெள்ளை டவல் போடப்படுகிறது தெரியுமா?

அரசு அலுவலகங்கள் எப்போதும் புதுமையான அனுபவத்தையே கொடுக்கும். குறிப்பாக மற்ற அலுவலக சூழலை காட்டிலும் அரசு அலுவலகங்களின் கட்டடம், அதன் பராமரிப்பு ஆகிய பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தாலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடையேவும் அந்த ஆச்சர்யம் இருக்கும்.

இப்படி இருக்கையில், அதிகாரிகளின் இருக்கைகளில் வெள்ளை நிற துண்டு போடப்பட்டு இருப்பது ஏன் என்று என்றாவது தோன்றியதுண்டா? அப்படியான கேள்வியைதான் மூத்த பத்திரிகையாளரான LP Pant ட்விட்டரில் பதிவிட்டிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த ட்வீட்டில், “இதுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. ஏன் இந்த அதிகாரிகளின் நாற்காலியில் மட்டும் அந்த வெள்ளை டவல் போடப்படுகிறது? அது எதை உணர்த்துகிறது என யாராவது கூறமுடியுமா?” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கண்ட நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்கள்.

அதில், “வெள்ளை நிறம் அதிகாரத்தின் நிலையை குறிக்கிறது.” , “வெள்ளை தூய்மையை வெளிப்படுத்துகிறது. ஆகையாள் அலுவலகத்துக்கு வரும் அதிகாரிகளுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்றும் எண்ணம் வர வைக்கும்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதனிடையே இந்தியன் ரயில்வே டிராஃபிக் சேவை அதிகாரியான சஞ்சய் குமார் கடந்த பிப்ரவரி மாதம் இதேப் போன்ற கேள்வியை ட்விட்டரில் எழுப்பியிருந்தார். அதில், “ஒரு அறையில் 10க்கும் மேற்பட்ட இருக்கைகள் இருக்கும் போது மூத்த அதிகாரியின் நாற்காலியை எப்படி வகைப்படுத்துவது? அதில் ஒரு வெள்ளை டவலை போடுங்கள்.” எனக் குறிப்பிட்டு அதிகாரத்துவத்தை குறிக்கும் #bureaucracy என்ற ஹேஷ்டேக்கையும் போட்டிருந்தார்.

ஆனால் இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால், பிரிட்டிஷ் ஆட்சியின் போது நாற்காலியில் வெறுமனே உட்காருவதால் வரும் சூடு மற்றும் வியர்வையை தவிர்ப்பதற்காக ஆங்கிலேயே அதிகாரிகள் இருக்கையில் வெள்ளை டவலை போட்டு பயன்படுத்தி வந்தார்கள். அந்த பழக்கம்தான் இப்போது வரை வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com