மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதன் பின்னணி இதுதானாம்! எப்போது அமலுக்கு வரும் தெரியுமா?

மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதன் பின்னணி இதுதானாம்! எப்போது அமலுக்கு வரும் தெரியுமா?
மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதன் பின்னணி இதுதானாம்! எப்போது அமலுக்கு வரும் தெரியுமா?

தமிழகத்தில் வரும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என TANGEDGO அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய மின் திட்டங்களை அமைப்பதற்கு கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு மின்சார வாரியம் இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2014 டிசம்பரில் திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை அமலுக்கு கொண்டு வர மாநில அரசு அனுமதி வழங்கியதையடுத்து, TANGEDGO மின் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுத்துள்ளது. 2014-ம் ஆண்டு டிசம்பரில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற நேரத்தில், TANGEDGO-வின் நிதி நிலைமை மிக மோசமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் மட்டும், 1 லட்சம் கோடியைத் தாண்டியது. அதை கருத்தில்கொண்டு, நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் கட்டணத்தை உயர்த்த TANGEDGO தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த மக்களவைத் தேர்தல் 2024ல் தான் நடக்க உள்ளது. எனவே மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு இதுதான் சரியான தருணம் என்பதை TANGEDGO அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

இதுகுறித்து TANGEDGO அதிகாரியொருவர் நம்மிடையே பேசுகையில் “கட்டணத்தை மாற்றியமைக்காத வரை, ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (REC) மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) ஆகியவற்றிடம் இருந்து எந்த நிதி உதவியையும் பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கு கடன் உதவி தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் அதிகரிப்பதைத் தொடர்ந்து, 1.45 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தாண்டியது. இதற்கிடையே இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் டான்ஜெட்கோவுக்கு எந்தக் கடனும் வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.

ரிசர்வ் வங்கியின் முடிவைத் தொடர்ந்து, உப்பூரில் மற்றும் உடன்குடியில் அமைக்கப்படவுள்ள 2ம் கட்ட அனல்மின் திட்டங்களும் அமைக்க நிதியில்லாமல் சிக்கலை எதிர்கொள்கின்றன. தமிழகத்தின் மின்தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் அனல் மின் நிலையங்களை அமைக்காவிட்டால் தமிழகத்தில் புதிதாக வரவிருக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவது கடினம்.

திருத்தப்பட்ட கட்டணம் உடனடியாக அமலுக்கு வராது என்றும் தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (TNERC) முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும், TNERC மாநிலத்தின் பல்வேறு நுகர்வோரின் பரிந்துரைகள் கேட்கும் என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் கட்டணம் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும்" என்றார்.

மேலும் “கட்டணத்தை திருத்தியவுடன் ஒவ்வொரு ஆண்டும் ரூ.16,491 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிதியாண்டில், திருத்தப்பட்ட கட்டணமானது நடைமுறைக்கு வரும் போது, 10,000 கோடி ரூபாய்க்கும் குறைவான வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் கூறினார்.

முதல் 100 யூனிட்களை இலவசமாக வேண்டாம் என்பவர்களை கையாள்வது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறதாகவும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “முதல் 100 யூனிட்களை இலவசமாக அனுபவிப்பவர்கள் மற்றும் வேண்டாம் என்பவர்கள் அடிப்படையில் நுகர்வோரை நாங்கள் பிரிக்க tangedco திட்டமிட்டுள்ளோம்” என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com