விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: பிரதமர் மோடி

விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: பிரதமர் மோடி

விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: பிரதமர் மோடி
Published on

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி ஒரு மாதமாகிறது. இதன்பின்னர் விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் காணொலி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், விவசாயிகள் சில கோரிக்கைகளுடன் டெல்லிக்கு போராட வந்தனர் என்றும், ஆனால் சிலர் அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை திசை திருப்புவதாக குற்றம்சாட்டினார்.

வேளாண் போராட்டத்தை வைத்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள், அதுகுறித்து பொய் பரப்புரைகளையும், கட்டுக்கதைகளையும் பரப்புவதாக பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசு விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com