'எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயார்': நிர்மலா சீதாராமன்

'எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயார்': நிர்மலா சீதாராமன்
'எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயார்': நிர்மலா சீதாராமன்

டோக்லாம் பகுதியில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால், அப்பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக பிரச்னை நீடித்து வந்தது. இரு தரப்பும் ராணுவத்தை வாபஸ் பெறுவதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் டோக்லாம் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் சீனா பீரங்கிகள், ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாகவும், 7 ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், டோக்லாம் உள்பட எல்லையில் எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார். ராணுவத்தை நவீனமயமாக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றும், பிராந்திய ஒற்றுமை மற்றும் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com